தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Default Image

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபால்  தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை மீண்டும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடும்  என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார் .மேலும் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று,மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னாள் எம்எல்ஏ-க்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், செல்வராஜ், எ.கே.சி.சுந்தரவேல், ராமநாதன், முனுசாமி, சிவசுப்பிரமணியன் ஆயோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 1ம் தேதி பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்