தவறான பாதையை காட்டிய கூகுள் மேப்! கூகுள் மேப்பை நம்பி சென்றவர்களின் பரிதாபமான நிலை!
அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பல இடங்களில் இருந்து, கூகுள் மேப்பின் உதவியுடன், பலர் சென்றுள்ளனர்.
கூகுள் மேப், இவர்கள் விமான நிலையத்திற்கு மிகவும் குறுகிய நேரத்தில் செல்வதற்கான பாதையை காட்டியுள்ளது. இதனையடுத்தது பலரும், கூகுள் மேப் காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் அனைவரும் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று, அதன்பின் போக வழியின்றி திகைத்து நின்றுள்ளனர். அந்த இடத்தில் 100 கார்கள் நின்றுள்ளது. அதன்பின் தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது, இது தவறான பாதை என்று.
இதுகுறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் கூறுகையில், அவர் தனது கணவரை அழைத்து வருவதற்காக கூகுள் மேப்பின் உதவியுடன், குறுகிய நேரத்தில் செல்லக்கூடிய பாதையில் சென்றதாக கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்த போது, அங்கு 100 கார்கள் நின்றதாகவும், கடைசியாக தான் அவருக்கு இது தவறான பாதை என்று தெரிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ” கூகுள் மேப்பில், ஒரு வழியை தேர்வு செய்து, அந்த பாதைக்கான அளவு மற்றும் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்தெடுத்துதான் காட்டுவோம். ஆனால், சில நேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது.” என கூறியுள்ளது.