அமெரிக்க எல்லையில் நீரில் மூழ்கிய தந்தை – மகள் ! கண்கலங்க வைக்கும் புகைப்படம்!
அமெரிக்க எல்லை பகுதியில் நீரில் தந்தை மற்றும் அவரது மகள் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் இருந்து வேறு நாட்டிற்கு புலம் பெயரும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் எல்-சால்வடார் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமரேஸ் மற்றும் பிறந்து 23 மாதமே ஆன அவரது மகள் லவேரியா ஆகியோர் அமெரிக்க எல்லையை கடக்கு முயற்சித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு எல்லைக்கும் மெக்சிகோவின் எல்லைக்கும் இடையில் பாயும் நதியான ரியோ கிரண்டியின் கரையில் இருவரது உடலும் ஒதுங்கி இருந்துள்ளது. அதில் இருவரும் தலை கீழ் இருந்த நிலையிலும் இருவரது தலையும் ஒரே மேல்ச்சட்டையில் முகம் தெரியாத நிலையில் இருந்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
விசாரணையில் இவர்கள் எல்-சல்வடார் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களை இந்த நிலைமைக்கு ஆக்கியது அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்று கோபம் அடைத்துள்ளனர். அதிபர் கொண்டு வந்த தவறான குடியுரிமை சட்டத்தின் விளைவாகவே இது போன்று சம்பவங்கள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.