ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வரிச்சலுகை வேண்டும்
வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு தங்களின் பரிந்துரைகள் குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .அதில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.10,000 வரையிலும் வரிச்சலுகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.