தவான் ,கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 127 பந்தில் 101 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் குறைந்த ஒரு நாள் போட்டியில் 10 சதத்தை அடித்த வீரர்களில் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.
இதற்கு முன் மூன்றாம் இடத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் இருந்தார். தற்போது தவான் ,கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
டி காக் – 55 போட்டிகள்
அம்லா – 57 போட்டிகள்
பாபர் – 68 போட்டிகள்
தவான் – 77 போட்டிகள்
கோலி – 80 போட்டிகள்