இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு!!-ஓர் அதிர்ச்சி தகவல் !!!
சமீப காலமாக வேலை இழப்பு என்பது பல துறைகளிலும் அதிகரித்து வருகிறது. பா ஜ க அரசு பதவியேற்கும் போது ஐந்தாண்டுகளில் சுமார் 2 கோடி புது வேலைவாய்ப்புக்கள் உண்டாக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் நிஜத்தில் வேலைவாய்ப்புக்கள் விவசாயம், கட்டுமானம் போன்ற இடங்களில் கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது. மற்ற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பும் குறைந்து பலர் வேலை இழந்துள்ளனர்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் சுமார் 15.3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை இந்த அரசு செய்ததக தெரியவில்லை எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.