ஆஸ்திரேலியா அணி கேப்டன்களில் ஆரோன் பிஞ்ச் இரண்டாம் இடம்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 116 பந்தில் சதம் விளாசினார்.நேற்றைய போட்டியில் பிஞ்ச் 116 பந்தில் 11 பவுண்டரி , 2 சிக்ஸர் என 100 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் அடித்த இரண்டு சதமாகும்.இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி கேப்டன்களில் அதிக சதம் அடித்த முதல் வீரர் ரிக்கி பாண்டிங். இவர் உலகக்கோப்பையில் நான்கு சதம் விளாசி உள்ளார்.இவருக்கு பிறகு இரண்டாம் இடத்தில் இரண்டு சதம் அடித்து பிஞ்ச் உள்ளார்.
ரிக்கி பாண்டிங் – 4
ஆரோன் பிஞ்ச் – 2 *
ஸ்டீவ் வா – 1
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025