முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவியா ! உண்மைத்தகவல் என்ன?

Default Image

மேற்குவங்கம், கேரளா உட்பட 12 மாநில ஆளுநர்களின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய இருக்கும் புதிதாக ஆளுநர் பதவிக்கு பாஜக காட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்னன். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கன்னியாகுமரி போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழகத்தில் ஒரே தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார் . மேலும் தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களிலிலும் வெற்றி பெறவில்லை. எனவே, தமிழக பாஜக மூத்த தலைவராக இருக்கும் பொன்னார் அவர்களுக்கு ஆளுநர் பதவி தர இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கம்,உத்திரபிரதேசம், திரிபுரா, நாகலாந்து, குஜராத் ஆகிய மாநில ஆளுநர் பதவி ஜூலை மாதத்துடனும், மகாராஷ்டிரா,கோவா, கர்நாடக மாநில ஆளுநர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடனும்,  கேரளா மாநில ஆளுநர் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்திலும் முடிகிறது. அதே போல், சட்டீஸ்கர், மிசோரம், ஆந்திரா மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்