மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்
மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 13,500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை.
ஆனால் மெகுல் சோக்சி மேற்கு இந்திய தீவில் உள்ள ஆண்டிகுவாவில் பதுங்கியுள்ளார்.இந்த நிலையில் ஆண்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்றும் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.