இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து , ஆஸ்திரேலியா மோதல் !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இங்கிலாந்து அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ,இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் எட்டு புள்ளி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பத்து புள்ளி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.