ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா!ரிசர்வ் வங்கி விளக்கம்
2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் உள்ள நிலையில் ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அதில், தவிர்க்க முடியாத சொந்த காரணங்களுக்காக ஜூலை 23-க்கு மேல் பணியை தொடர முடியாது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கடிதம் வழங்கினார் . சில வாரங்களுக்கு முன்பு விரால் ஆச்சார்யா அளித்த கடிதம், தற்போது பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.