மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது-அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் ஆகும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது .அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.