141 பிஞ்சுகளின் மூச்சை நிறுத்திய மூளைக்காய்ச்சல்..!என்ன செய்கிறது..?மத்திய- மாநில அரசு.! உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி
நாட்டையே தினமும் சோகத்தில் ஆழ்த்தி வரும் பீகார் மாநில மூளைக் காய்ச்சளால் குழந்தைகள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.இதுவரையில் 141 பிஞ்சுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த துயரம் சம்பவம் காரணமாக மனோகர் பிரதாப் என்கின்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தான் இந்த உயிரிழப்பு நேரிட்டுள்ளது மற்றும் உயிரிழப்புகளை தடுக்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாக அவர் தனது தரப்பில் இருந்து கூறி இருந்தார்.
மேலும் அவர் தனது மனுவில் குழந்தைகளின் இந்த நோயை தடுக்க எந்தவிதமான மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவருடைய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது மட்டுமல்லாமல் மத்திய மற்றும் பீகார் அரசுகள் குழந்தைகளின் உயிரை கொன்று குவித்த இந்த மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் மேலும் என்ன மருத்துவ வசதிகள் அவர்களுக்கு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன சத்துணவு கொடுக்கப்படுகிறது.மேலும் அரசுகள் சுகாதார குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பவை குறித்த அறிக்கையை விரிவாக தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது.