மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது! பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் !
மேகதாது குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக மாநில அரசின் அனுமதி கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசு மற்றும் காவேரி வடிகால் வாரியம் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
மேலும், காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயல்வது நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அணை கட்டுவதால் தமிழகத்தில் காவேரி நீரை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படுமே தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த முடிவை தமிழக அரசு கடுமையாக கண்டிப்பதாகவும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.