வீரர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் ! காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்!
விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு துணிச்சலாக இருந்து மீண்டு வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன் ஆவர்.
கடந்த பிப்ரவரி மதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ எல்லையை பதன்கோட் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விமானப்படை வீரர்கள் துரத்தி அனுப்பினர் . அப்போது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று சிக்கிக் கொண்டார் விமானப்படை வீரர் அபிநந்தன். பின் ஓரிரு நாளில் அவர் விடுவிக்கப்பட்டார்.எந்த பயமும் இன்றி துணிச்சலாக அவர் பேசியது நாட்டு மக்களிடம் பிரபலமானது. அப்போது இருந்து அவரது முறுக்கு மீசையும் பிரபலமானது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரது மீசையை போல தங்கள் மீசையையும் மாற்றி கொண்டனர். இந்த நிலையில், இன்று மாநிலங்களைவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வீரர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.