‘மாரி-2’ படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்

 

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதன் படி, சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்து வருட இடைவேளைக்கு பின்பு மீண்டும் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment