கேப்டன் கோலி ,பும்ரா இருவரும் ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு !
உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடந்து வருகிறதுஇந்த தொடரில் இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டி மழையால் ரத்தானது அதனால் இந்திய அணி 9 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி தனது ஆறாவது போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் வருகின்ற 27-ம் தேதி விளையாட உள்ளது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை அறிவித்து உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.அங்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மேலும் இரண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இப்போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராயும் இருவரும் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் அவர்களுக்கு ஓய்வு அறிவிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இருவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மேலும் இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.