ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்..!வெளியாகிய மத்திய தகவல்
பாஜக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது
நடப்பு ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்து வருகிறது.அப்படி தாயாரிக்கும் பட்ஜெட் வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது என்னவென்றால் மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் வழங்க பட வேண்டிய ஊதியம் அனைத்தும் தள்ளிப்போகும் எனவும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வழங்க படாத ஊதியம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கிய பின் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துஉள்ளது. அதன்படி ‘ஏ’ பிரிவில் 1 லட்சம் பேர் மற்றும் ‘பி’ பிரிவில் 3 லட்சம் பேர் என மொத்தம் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.