போலீசாரை தாக்கிய 4 பேர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம்

Default Image

போலீசாரை தாக்கிய 4 பேர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தை சேர்ந்த  கார்த்திகேயன் என்ற போலீசார், சொகுசு காரில் வந்த 4 பேர் திருநங்கைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக, கார்த்திகேயன் அவர்களை கிளம்பும்படி கூறினார்.
ஆனால்  மதுபோதையில், இருந்த 4 இளைஞர்களும் அங்கிருந்து போக மறுத்தனர். இதனையடுத்து, போலீசார் லத்தியை எடுத்து மிரட்டியவுடன், கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின் தாக்க முயற்சி செய்தனர்.
இதன் பின்னர்  போலீசாரை தாக்கிய 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சிறையில் உள்ள 4 பேர் மீதும் 1 ஆண்டு  காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்