உலகக்கோப்பையில் அதிக ஸ்டெம் அவுட் செய்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் டோனி !
நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
தோனி இந்திய அணியில் சிறந்த வீரராகவும், முன்னாள் கேப்டனாகவும், கீப்பராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக ஸ்டெம் அவுட் செய்த வீரர்கள் பட்டியலில் டோனி இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.
தோனி இதுவரை விளையாடிய உலக கோப்பையில் ஆறு முறை ஸ்டெம் அவுட் செய்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான ரஷீத் கானை ஸ்டெம் அவுட் செய்ததன் மூலம் 7 முறையாக ஸ்டெம் அவுட் செய்தார்.
இதனால் உலக கோப்பையில் அதிக ஸ்டெம் அவுட் செய்த வீரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.முதலிடத்தில் குமார் சங்கக்காரா 13 ஸ்டெம் அவுட் செய்து முதலிடத்தில் உள்ளார்.
13 – Kumar Sangakkara
7 – MS Dhoni
7 – Adam Gilchrist
7 – Moin Khan