#WIvNZ :வில்லியம்சன் அபார சதம் !நியூ சிலாந்து அணி 291 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் முன்ரோ டக் அவுட்டாகி வெளியேறினார்கள்.பின்னர்  வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.ஆனால் டெய்லர் 69 ரன்களில் வெளியேறினார்.வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.அவரும் 148 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் கோட்ரல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது.