பொள்ளாச்சி பாலியல் வழக்கு : கைதான 5 பேரும் கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரும் கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கைதான 5 பேரும் கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு காரணமாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.