பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்
பட்ஜெட் என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசின் இனிவரும் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட வரவு செலவு திட்டமிட்டு, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருள் செலவுகளை திட்டமிட்டு செய்வது ஆகும்.
கருத்துக்கள்
இனி வரவிருக்கும் காலத்தில் பணகணக்கில் வரவுகளும், செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து அதற்கேற்ப ஒரு தொழில் அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவது ஆகும். இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத்திட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் சாட்டக்கூறு 112-ல் குறிப்பிடப்படும், நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் நிதி அமைச்சரால்,இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்தியா விடுதலை பெற்ற பின்னர் முதல் நிதிநிலை அறிக்கையை நவம்பர் 26, 1947-ஆம் ஆண்டில் வாங்கிய பெருமை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களையே சாரும்.