கடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ்! இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை!
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே திமுத் கருணாரத்ன 1 ரன்னும் , குசல் பெரேரா 2 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.13-வது ஓவரில் அவிஷ்கா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அடுத்தாக களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.
30-வது ஓவரில் குசல் மெண்டிஸ் மோர்கனிடம் தனது கேட்சை கொடுத்து 46 ரன்னில் வெளியேறினார்.மத்தியில் களமிறங்கிய ஜீவன் மெண்டிஸ் 0 , தனஞ்சய டி சில்வா 29 ,இசுரு உதனா 6 , திசாரா பெரேரா 2 , லசித் மலிங்கா 1 ரன்களுடன் வெளியேறினர்.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 85 ரன்கள் குவித்தார்.
50 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி. இலங்கை அணியில் பந்துவீச்சில் சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் வின்ஸ், பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ டக் அவுட்டாகி வெளியேற, வின்ஸ் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜோ ரூட் பொறுமையாக விளையாடி 57 ரன்கள் எடுத்திருந்தார். மோர்கன் 21 ரன்களும் பட்லர் 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, மெயின் அலி 16 ரன்களில் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி நிலைகுலைந்து போனது.
அதற்கடுத்து இறங்கிய வோக்ஸ், ஆர்ச்சர், ராஷித் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற இறுதிவரை பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை அடித்து களத்தில் நின்றார். இருந்தாலும் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.