முதல் முறையாக உலகக்கோப்பையில் சதம் அடித்த ஆஸ்திரேலிய அணி!
உலகக்கோப்பையில் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடந்த போட்டிகளில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இப்போட்டியில் டேவிட் வார்னர் 147பந்தில் 14 பவுண்டரி ,5 சிக்ஸர் என 166 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் பல சாதனைகளை புரிந்தார்.
- ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த 16 சதமாகும்.
- டேவிட் வார்னர் உலகக்கோப்பையில் அடித்த மூன்றாவது சதமாகும்.
- பங்களாதேஷ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் அடித்த முதல் சதமாகும்.
- ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் சதத்தை அடித்து உள்ளது.
- நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் அடித்த இரண்டாவது சதமாகும்.
இதுவரை இந்த இரு அணிகள் நேற்றைய போட்டி மூலம் மூன்று முறை மட்டுமே மோதி உள்ளது.மோதிய அனைத்து போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உள்ளது.