தமிழக கூலித்தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!
சேலத்தை சேர்ந்த செல்வம், சத்தியராஜ் ஆகியோர் செம்மர கடத்தல் கும்பலிடம் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர், தங்கள் ஊருக்குச் செல்ல நேற்று முன்தினம் இரவு சித்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, ஊர்காவல் படை வீரராக பணிபுரியும் மோகன்ரெட்டி அங்கு வந்துள்ளார்.
செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி செல்வம், சத்தியராஜை தமது கூட்டாளிகளுடன் ஆட்டோவில் மோகன்ரெட்டி கடத்தியுள்ளார். பின்னர், ரூ.2.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த உறவினர்கள், சித்தூர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, செல்வம், சத்தியராஜ் ஆகியோரின் உறவினர்களை போன்று செல்போனில் தொடர்பு கொண்டு மோகன் ரெட்டியிடம் பணம் கொண்டு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கடத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், செல்வம், சத்தியராஜை மீட்டனர்.
இதுதொடர்பாக மோகன்ரெட்டி உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவர்களை செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக கூலித்தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஊர் காவல் படை வீரர் உட்பட 4 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
source: dinasuvadu.com