ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தாக்குதல்!
ஆப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தார்.
காபூல் நகரின் சாஷ் தராக் பகுதியிலுள்ள தேசிய பாதுகாப்பு இயக்குநரக நுழைவு வாயில் அருகில் அதிகாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் உட்பட இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
source: dinasuvadu.com