நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம்! விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையீட்டில், மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு முறையீடு செய்துள்ளனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவேலு விஷால் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், விஷால் தரப்பினர் மனுவாக தாக்கல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.