நான் இருக்கும் வரை தினகரனை முதல்வராக விடமாட்டேன்!
ஜெயலலிதா இல்லாததால் தோல்வியை சந்தித்துள்ளோம். மக்களை சந்தித்து பணிகளை செய்திருக்க வேண்டும். இருப்பினும் அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை. 47 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதால் மன நிம்மதியோடு இருக்கிறோம். திமுக நிலைமைதான் மோசமாக போய்விட்டது. தினகரன் அதிகப்படியான தேர்தல் வேலைகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கு பணியாற்றட்டும். பின்னர் அதைப்பற்றி பேசலாம்.
இடைத்தேர்தல் முடிவால் அதிமுகவினர் அனைவரும் தினகரன் பின்னால் வருவார்கள். சட்டமன்றத்திற்குள் ஆட்சி மாறாது, காட்சி மாறும் என்று புகழேந்தி கூறுகிறாரே?. 3 மாதத்தில் ஆட்சி கலையும் என்கிறாரே தினகரன்?.
அந்த கருத்தை ஏற்க முடியாது. கட்சி, சின்னம், கொடி எங்களிடம் இருக்கிறது. இதை வைத்து எங்களது அரசியல் தொடரும். அதே நேரத்தில் தினகரனால் முதல்வராக முடியாது. அதனை நாங்கள் ஏற்க மாட்டோம். 3 மாதத்தில் ஆட்சியை கலைப்போம் என்பவரிடம் நாங்கள் ஏன் போய் சேர வேண்டும்.
அதெல்லாம் முடியாது. முதல்வராக விடமாட்டோம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டும் போதுமா. தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு வேண்டும். அந்த கட்டமைப்பு கட்சி, சின்னம் உள்ள எங்களிடம்தான் உள்ளது.
தொலைபேசி வாயிலாக நிறைய எம்எல்ஏக்கள் தினகரனுக்கு வாழ்த்து சொல்கிறார்களாமே?
சொல்லட்டம். சில பேர் பொறுப்புக்காக இங்க, அங்க மாறிப்போவாங்க என கூறியுள்ளார் …
source: dinasuvadu.com