ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பான கூட்டம் !அதிமுக பங்கேற்கவில்லை

Default Image

ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் , ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் திமுக,காங்கிரஸ்,திரிணாமுல்,தெலுங்கு தேசம்,சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சி தலைவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க்கவில்லை.
மேலும்  ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றபோதும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்