நான் மட்டும் நாடு திரும்ப போகிறேன் என நினைத்தால் அது முட்டாள் தனம்! சக வீரர்களை எச்சரித்த சர்ப்ராஸ்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியும் ,3 போட்டிகளில் தோல்வியையும் ஒரு போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் மீதி உள்ள நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் நாடு திரும்பும் போது பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என சக வீரர்களை அணியின் கேப்டன் சர்ப்ராஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தி நியூஸ் காம் என்ற இணைத்தள செய்தியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் மற்ற வீரர்களை கடுமையாக எச்சரித்தார் என தெரிவித்து உள்ளது.
மேலும் நான் மட்டும் தான் நாடு திரும்ப போகிறேன் என நினைத்தால் அது உங்களது முட்டாள் தனம், நாம் அனைவரும் தான் நாடு திரும்ப போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இதுவரை மோசமாக விளையாடியதை மறந்து விட்டு மீதி உள்ள நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என கூறியதாக தி நியூஸ் காம் என்ற இணைத்தள செய்தி தெரிவித்து உள்ளது.
அணியின் கேப்டன் சர்ப்ராஸ் இப்படி பேசும் போது மூத்த வீரர்கள் ,பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோர் இடையில் ஏதும் பேசவில்லை எனவும் கூறியுள்ளது.