விளையாட அனுமதி கோரி பிசிசிஐ-க்கு யுவராஜ் சிங் கடிதம்!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு முன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ஐபிஎல் தொடரிலும் விலகிவிடுவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் பெரிதாக இருந்தது.
அதற்க்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் டி20 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட அனுமதி தருமாறு வேண்டுகோள் வைத்து உள்ளார்.இவரது இந்த வேண்டுகோள் மூலம் ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் விளையாடுவர் என தெரியவந்து உள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.