நடிச்சா ஹீரோவா மட்டும்தான் -சந்தானம் பேட்டி
கோவை கொடிசியா சார்பில் 5-வது ஆண்டு கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 1,50000 சதுர அடியில் 450 மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.இவற்றில் சந்தானம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோர்.
இதனை முன்னிட்டு சந்தானம் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அங்கு சந்தானம் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுக்கமுன் வந்தனர் .
சுமார் 120 படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளேன். இனி நான் ஹீரோவாக நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது நான் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள “சக்கைப்போடு போடு ராஜா” என்ற படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அடுத்தபடியாக வருகிற பிப்ரவரி மாதம் “சர்வர் சுந்தரம் “படம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர இன்னும் 2 படங்களில் இனி நான் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு எடுத்து உள்ளேன்.
புதியபடம் விரைவில் இயக்குவதாக உள்ளேன்.கதையின் சிரபப்சம் காரணமாக வேறுநடிகரை ஹீரோவாக வைகபோவதாக அவர் கூறினார். இதனை தொடர்ந்து வடிவேல் பாலாஜி, தீனா, சவுந்தர்யா உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் அரங்கில் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
source-dinasuvadu