நீர்சத்து குறைபாட்டை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் கத்தரிக்காய்!
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.
தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.
நீர்சத்து
நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை சரி செய்கிறது.
உடல் எடை
இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தினமும் உணவில் கத்தரிக்காயை சேர்த்து வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.
உடல் வலிமை
கத்தரிக்காயை நாம் நமது உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும். மேலும் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண்பார்வை
கண் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதில் கத்தரிக்காய் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. கத்தரிக்காயை நாம் நமது உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கண் பார்வை குறைபாடுகள் நீங்கு.
குறிப்பு
உடலில் புண்கள் மற்றும் அரிப்பு இருந்தால், கத்தரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், முற்றிய கத்தரிக்காயை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.