மக்களவையில் தமிழில் பதவி ஏற்ற தமிழக எம்பிக்கள்!இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகும் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக்
நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்கள் பதவி ஏற்றுக்கொண்டது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மக்களவையில் தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.