முஸ்தாபிசுர் 3 விக்கெட்டை வீழ்த்திய அனைத்து போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி !
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பங்களாதேஷ் அணி ஆகிய இரு அணிகளும் மோதியது.இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
நிதானமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் சேர்த்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றியை பங்களாதேஷ் பதிவு செய்தது.
இப்போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டை பறித்து பங்களாதேஷ் அணி வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ஆண்ட்ரே ரஸ்ஸல் ,ஷிம்ரான் ஹெட்மியர் ,ஷாய் ஹோப் ஆகியோரின் விக்கெட்டை பறித்தார்.
மேலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடிய ஒருநாள் போட்டியில் 3 அல்லது அதற்க்கு மேல் விக்கெட் எடுத்த அனைத்து போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றியை பதித்து உள்ளது.
6/43 v IND
5/34 v ZIM
5/50 v IND
4/23 v IRE
4/43 v PAK
4/43 v WI
3/33 v ZIM
3/35 v WI
3/38 v SA
3/56 v SL
3/67 v SA
3/59 v WI