ஆரோன் பின்ச் ,ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ள ஷகிப்
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 322 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாடி 124 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் உள்ளார்.இவர் நான்கு போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் குவித்து உள்ளார்.
ஷகிப் அல் ஹசன் 384
ஆரோன் பின்ச் 343
ரோஹித் சர்மா 319
டேவிட் வார்னர் 281
ஜோ ரூட் 279