தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன் -ராகுல்காந்தி
தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியாக பதவியேற்றார்.
இதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் கூறுகையில்,தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக பணியை தொடங்க உள்ளேன். வயநாடு தொகுதி எம்.பியாக பதவியேற்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன்.இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.