ஜெர்சி மூலம் பாகிஸ்தான் இந்தியாவை இணைத்த தம்பதியினர் !

Default Image

உலகக்கோப்பையில் 22-வது  லீக் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான்  அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர்.
மழைகாரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஒரு தாம்பத்தினர் நேற்று முன்தினம் நடந்த இந்தியா ,பாகிஸ்தான் போட்டியை காண சென்றனர்.அதில் கணவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் இரு அணிகளின் ஒருங்கிணைந்த ஜெர்சி அணிந்து வந்தனர்.அதனால் அங்கு இருந்த மற்ற ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

இது பற்றி அந்த தாம்பத்தினர் கூறுகையில் “நாங்கள் இன்று அமைதியை ஆதரிக்கிறோம். அவள் இந்தியாவைச் சேர்ந்தவள், நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். எனவே நாங்கள் இரு நாடுகளையும் ஆதரிக்கப் போகிறோம்.நாங்கள் அனைவரும் நல்ல கிரிக்கெட்டை ஆதரிக்கிறோம்.
இன்று யார் தங்கள் சிறந்த விளையாட்டை விளையாடுகிறார்களோ அவர்கள் வெல்ல வேண்டும். மேலும் கிரிக்கெட் இன்று வெல்ல வேண்டும்.என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்