நடிகர் விஷாலுக்கு சவால் விடுத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி!
நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகை. கடந்த சில நாட்களாக இவர் பல நடிகர்களின் மீது, பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். தற்போது இவர் நடிகர் விஷால் மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி கூறுகையில், விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என நிரூபியுங்கள் என ஸ்ரீரெட்டி சவால் விடுத்துள்ளார்.