நடைமுறைக்கு வந்தது தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கும் முறை
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.
3 முறை அபராதம் விதித்தும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் வணிக உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.மேலும் தமிழகம் முழுவதும் தற்போது வரை 820.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ1.58 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.