தினகரன் வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது!
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணபலத்திற்கு அடிபணியாமல், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக, அயராது பாடுபட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல் வீர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில், தி.மு.க.வும், தினகரனும் சேர்ந்து கூட்டு சதி செய்துள்ளதாகவும், பதவிக்காக இப்படியும் சதி செய்வார்களா என்று திமுகவினரை நோக்கி, தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று விமர்சித்துள்ளனர்.
ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் நோட்டை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற்றதும், அதற்கு ஈடாக 10 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com