கிறிஸ்துமஸ் அன்று வீடுகளில் நட்சத்திரங்கள் கட்டப்படுவது ஏன் தெரியுமா….?

Default Image
இயேசு பிறந்தபோது, பெத்லகேம் வயல்வெலியில் இருந்த இடையர்களுக்கு தோன்றியவானதூதர், இதோ, எல்லா மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிரந்திருக்கிறார் என்றார்.
Image result for christmas star in tamilnadu

உடனே விண்ணகத் தூதர் பேரணி அவருடன் சேர்ந்து, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! என்று கடவுளைப் புகழ்ந்து, வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் ஆகும்.
இதை பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4ம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. தெருக்களில் கிறிஸ்துமஸ் கீதங்களை[ பாடும் வழக்கம் அசிசி புனித பிரான்சிசால் 13ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பர்றி, கிழக்கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கல் வானியலில் சிரந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு.
அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 16ம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்