மேகதாது :தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டிய அவசியம் இல்லை..!கர்நாடக முதல்வர்
மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்தார்.
அந்த சந்திப்பில் மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்ததே கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் ஆகையால் மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளோ, சட்டமோ இல்லை மேகதாது அணைக்கு தமிழக அரசின் ஒப்புதலை பெறுமாறு மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு மத்திய அரசு தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி எங்களுக்கு அனுமதி பெற்று தர வேண்டும் எனவும் தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை குமாரசாமி நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகானிடம் அளித்தார்