17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்!இந்திய மருத்துவர் சங்கம் அறிவிப்பு

Default Image

17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அங்கு இருந்த இளநிலை  மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினார்கள்.இதில் மருத்துவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.இதனால் அங்குள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளும் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.ஆனால் அங்கு ஆளும் மம்தா அரசு போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.ஆனால் மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களை இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் தத்தா சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற 17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.இந்த வேலை நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவரும் ஈடுபடுகின்றனர்.
இதனிடையில்  வரும் 15,16 -ஆம் தேதிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா மற்றும் அமைதி பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .போராட்டம் நடைபெறும் நேரங்களில் அவசரகால சிகிச்சை தொடர்ந்து இயங்கும் என்று இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்தது.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ் வர்தன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனெர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘இந்த விவகாரத்தில் சரியான தகவல் பரிமாற்றம் இருக்கவேண்டும். மேலும் இவ்விகாரத்தில் கருணையுடன் கையாளவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்