இந்தியாவில் டிக் டாக்கால் 12 கோடி பேர் அடிமை..!அதிகாரபூர்வ அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து இதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது தற்போது இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது.பள்ளி மாணவர்கள் இருந்து பல்லு போன கிழவி வைரக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்கள் எல்லாம் வரம்பு மீறிய தாக உள்ளது.சமீபத்தில் கூட டிக்டாக் செயலியை பயன்படுத்த தனது கணவர் தடை விதித்தற்குக்காக மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல்கள் எல்லாம் வெளியாகியது.
மக்களையும் ,இளைஞரகளையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது.அப்படி இந்தியாவில் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எத்தனை பேர் என்றால் சுமார் 12 கோடி பேர்களாம் இவர்கள் அத்தனை பெரும் இதற்கு அடிமைகளாக உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.