சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக் கொலை
சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்லரசு என்பவர் சென்னை மாதவாரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவர் மீது கொலை,கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
நேற்று இரவு கதிர் என்ற ரவுடியை வியாசர்பாடி b3 காவல் நிலைய முதல் நிலை காவலர் பவுன்ராஜ், குற்றப்பிரிவு காவலர் ரமேஷ் ஆகியோர் விசாரிக்க சென்றனர்.அப்போது கதிருடன் இருந்த கார்த்திக் மற்றும் வல்லரசு என்ற ரவுடிகள் காவலர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்.இதில் முதல் நிலை காவலர் பவுன்ராஜ்க்கு பலத்தகாயம் ஏற்பட்டது.பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வந்தனர்.பின்னர் அங்கிருந்த மூவரும் தப்பியோட முயன்றனர்.ஆனால் வல்லரசு மட்டும் காவல்துறையை மீண்டும் தாக்க முயன்றார்.அந்த சமயத்தில் அங்கிருந்த காவல் ஆய்வாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியில் வல்லரசு சுட்டார்.இதனால் வல்லரசு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.மீதமுள்ள இரண்டு பெரும் தப்பியோடினார்கள்.இவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.