வருண பகவானிடம் வேண்டிய கேதர் ஜாதவ் வைரலாகும் வீடியோ !
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை 18 போட்டிகள் நடந்து முடித்து உள்ளது.
18 -வது லீக் போட்டியில் நேற்று இந்திய அணியும் -நியூசிலாந்து அணியும் மோத இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானது.இதுவரை 4 போட்டிகள் மழையால் ரத்தானது.
இந்நிலையில் நேற்று மழை பெய்து நின்ற பிறகு இந்திய அணியின் வீரர் கேதர் ஜாதவ் வருண பகவானிடம் வேண்டிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நாடிங்ஹாமில் மழை கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக இந்தியாவின் தண்ணீர் பஞ்சம் இருக்கும் மகாராஷ்டிராவிற்கு செல்லும் படி கேட்டுக்கொண்டார்.