உலககோப்பை கப் எங்களுக்குத்தான்!அபிநந்தனை வைத்து கேலி செய்து விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான்

பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட்டுக்கு சென்று இந்திய ராணுவப்படை தாக்குதல் நடத்தியது.பிறகு இந்திய இராணுவத்தின் மீது பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து. அப்போது பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்த இந்திய விமான படையை சார்ந்த அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார்.
அபிநந்தன் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு (Am sorry. I not supposed to tell this)என பதில் கூறுவர்.பிறகு டீ எப்படி இருக்கு என கேட்க நன்றாக உள்ளது என பதிலளிப்பார்.
இந்நிலையில் இந்திய அணிக்கும் , பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி வருகின்ற ஜூன் 16-ம் தேதி  நடைபெறவுள்ளது.அந்தப் போட்டியை பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில் இந்திய அணியின் உடை அணிந்து ஒருவர் அபிநந்தன் போல முறுக்கு மீசை வைத்து கொண்டு ஒருவர் டீ குடிச்சி கிட்டே Am sorry. I not supposed to tell this என திரும்ப திரும்ப சொல்லுவார்.


பிறகு டீ நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு எழுந்து செல்வார்.அப்போது ஒருவர் டீ கப்பை வைத்துவிட்டு செல்லுங்கள் என கூறுவர்.இந்த விளம்பரம் உலகக்கோப்பை கப்பை குறிப்பிடும் விதமாக இந்திய அணி வைத்து விட்டு செல்லுமாறு சொல்லுவது போலும் , அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்டு உள்ளதால் அந்த  விளம்பரம் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
murugan