மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மாநில அமைச்சர்கள் சந்திப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உள்ளாட்சித்துறை வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ளாட்சித் துறைக்கு வர வேண்டிய நிதியை உடனடியாக வழங்கிடக்கோரி கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழாகதின் வளர்ச்சிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.